"பாரடா உனது மானிடப் பரப்பை! பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்! 'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்: அகண்டமாக்கு! விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! மானிட சமுத்திரம் நானென்று கூவு! பாரதிதாசன்